sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தினமலர் பவள விழா/ஒப்பற்ற 'பட்டம்'

ஒப்பற்ற 'பட்டம்'

ஒப்பற்ற 'பட்டம்'


PUBLISHED ON : பிப் 06, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2026 02:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கள் பள்ளியின் +2 மாணவர்கள் செல்வன் எஸ்.டி.சஞ்சீவ், முகம்மது உமர் ஆகியோரின் அணி, இந்த ஆண்டு, கவுரவம் மிக்க 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டியில், புதுச்சேரி பதிப்புக்கான இறுதிச்சுற்றில், முதலிடம் பிடித்து சாதித்ததை அறிந்து, மனம் குளிர்ந்தேன். நாலாண்டுகால கடும் முயற்சியின் பலன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, எங்கள் பள்ளியில், தினமலர் வெளியிடும் மாணவர்களுக்கான நாளிதழ் பட்டம் இதழை வாங்கி, மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். வெறும் பாடப்புத்தக அறிவை நம்பி இருக்காமல் பொது அறிவு, படைப்பாக்கம், சுயசிந்தனை என மாணவர் மனம் விரிவடைய பட்டம் இதழ் துணை நிற்கிறது. கூடவே, விளையாட்டு, கணிதம், வரலாற்று அறிவு, அறிவியல் சோதனைகள், உலக இலக்கியம் என பரவலான சிந்தனை விரிவாக்கத்தை கொடுக்கும் ஒப்பற்ற இதழ் பட்டம்.

கடந்த 2017ல், இந்த இதழை வாசிக்க, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வரவழைத்து கொடுத்தது முதல், எங்கள் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளில் மட்டுமல்ல, நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளிலும் சிறப்பான சாதனைகளை பெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தினமலர் ஆண்டு தோறும் நடத்தும் பட்டம் வினாடி வினா ஒரு சிறந்த அறிவு திருவிழா. இதில் கலந்துகொள்ள, மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக, நாங்கள், சுமார் 1,300 மாணவர்களுக்கு போட்டித் தேர்வு வைத்து, எட்டு அணிகளை தேர்வு செய்வதன் மூலம், ஏறக்குறைய யாவரையும் பங்கு பெற வைக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் காலங்களிலும் நமது முயற்சியும் ஒத்துழைப்பும் தொடரும். தொடரட்டும்.

ஒப்பற்ற பட்டம் இதழை வெளியிடும் தினமலர், தனது பவள விழா ஆண்டை கொண்டாடி வருவதில் மகிழ்ச்சி. தினமலரின் பணியும் பட்டம் இதழின் பணியும் மேலும் பல்லாண்டு மாணவர்களுக்கு பலனை தர என் வாழ்த்துக்கள்.

டாக்டர் ஆர். நடராஜன்,

முதல்வர், கிருஷ்ணசாமி மெமோரியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கடலூர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us