/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'கடமை தவறும் மக்கள் பணியாளர்களுக்கு சிம்ம சொப்பனம் தினமலர்' என்பது என் கருத்து

PUBLISHED ON : டிச 20, 2025 02:33 PM

காலை எழுந்தவுடன், 'தினமலர் நாளிதழ் வந்திருச்சா...' எனக் கேட்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். 'ஒரு நாளிதழில் மக்கள் நலன் சார்ந்த செய்திகள் இவ்வளவு வெளியிட முடியுமா' என்பது பெரும் ஆச்சரியம்!
ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர், மாணவர்களுக்கான பட்டம், ஆரோக்கியம் காக்கும் நலம், வாகன வரலாறு சொல்லும் கடையாணி, வருமானம் ஈட்ட வழிகாட்டும் லாபம், மக்கள் தங்கள் பகுதி குறைகளை அரசுக்குச் சொல்ல புகார் பெட்டி, வாசகர்கள் தங்கள் எண்ணங்களைச் சொல்ல இது உங்கள் இடம்... அப்பப்பா... எத்தனை பகுதிகள்!
'படிக்கலாம் வாங்க' என அழைக்கும் புத்தக மதிப்புரைகள், மன ஆரோக்கியம் விரும்பும் அத்தனை பேருக்குமான அருமருந்து! 'டீ கடை பெஞ்ச் பகுதியில் செய்தி வந்துவிட்டால் நம் வாழ்வு அஸ்தமனம்' என்று அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அலறுவதாக நான் அறிந்திருக்கிறேன்; 'கடமை தவறும் மக்கள் பணியாளர்களுக்கு சிம்ம சொப்பனம் தினமலர்' என்பது என் கருத்து!
'பவள விழா' கொண்டாடும் தினமலர் நாளிதழ் எத்தனை விதமான அனுபவங்களை எதிர்கொண்டு வந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கையில் மலைத்துப் போகிறேன். இச்சீரோடும் சிறப்போடும் 'நுாற்றாண்டு விழா'வையும் தினமலர் காணும்; அதற்காக இப்போதே, மூத்த குடிமகனாகிய என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
- டி.ஆர்.ஸ்ரீநிவாசன், சமூக சேவகர், சென்னை.