உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
நமது கை, கால் விரல்களின் நகங்கள் பொதுவாக மாதத்துக்கு 3.5 மி.மீ., அளவில் வளரும்.
இந் நிலையில் குளிர்காலத்தை விட, கோடையில் நம் நகங்கள் அதிகமாக வளரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடையில் வெப்பநிலை அதிகம் என்பதால் உடலின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். விரல் நுனி களுக்கும் அதிக ரத்த ஓட்டம் கிடைப்பதால், நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும், ஆக்சிஜனும் கிடைத்து வேகமாக வளர்கின்றன. அதே போல கோடையில், உடல் மீது சூரிய ஒளி அதிகம் படுவதால், ‘வைட்டமின் டி’ அதிகமாக கிடைப்பதும், வளர்சிதை மாற்றம் அதிகம் இருப்பதும் இதற்கு காரணமாகிறது.
