PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அணுவின் வரலாறு
அணுவின் அடிப்படைகளில் ஒன்றான எலக்ட்ரானை கண்டறிந்தவர் பிரிட்டன் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன். மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் உட்பட பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். நவீன அணு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். மின்னிறக்க குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு 1906ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது மாணவரான நியூசிலாந்தின் எர்னஸ்ட் ரூதர்போர்டு, அணுவை பிளக்க முடியும் என நிரூபித்தார். இது அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது.

