PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM
கையால் எழுதுவதன் பயன்
தட்டச்சு செய்யாமல் கைகளால் எழுதுவதன் மூலம், சிறந்த கற்றல், சிறந்த நினைவுத்திறனுக்கு உதவுகிறது என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் டைப் செய்பவர்கள் ஒரு குழுவாகவும், 'ரைட்டிங் பென்' மூலம் கம்ப்யூட்டரில் கையால் எழுதுபவர்கள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டது. அப்போது சென்சார் வழியாக ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளை செயல்பாடு கணக்கிடப்பட்டது. இதில் கையால் எழுதுபவர்களின் மூளை செயல்பாடு சிறப்பாக இருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
தகவல் சுரங்கம்
'அக்னி' ஏவுகணை வரலாறு
பாதுகாப்பு துறையில் முக்கியமானது 'அக்னி'ஏவுகணை. உள்நாட்டில் தயாரான 'அக்னி - 5' ஏவுகணை சமீபத்தில் சோதிக்கப்பட்டது. இது 6000 கி.மீ., துாரம் சென்று தாக்கும். இது ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்தை சேர்ந்தது. 1989ல் 'அக்னி - 1' ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., தயாரித்தது. இது 1200 கி.மீ., துாரம் சென்று தாக்கும். அடுத்து 'அக்னி - 2' ஏவுகணை 2000 - 3500 கி.மீ., துாரமும், 'அக்னி - 3' 3000 -5000 கி.மீ., துாரமும், 'அக்னி - 4', 3500 - 5000 கி.மீ., துாரமும் சென்று தாக்கும் ஏவுகணை தயாரிக்கப்பட்டன.

