PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வலிப்பு ஏற்படுவது ஏன்
உலகில் 5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நவ.,17ல் தேசிய வலிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூளை நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இது அதிகமாகி ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது.
அது நரம்பு வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப் படுகிறது. உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை, கால் உதறத் தொடங்குகிறது. இது 'வலிப்பு' எனப்படுகிறது.

