தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?'

 'ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?'

 'ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?'

1


PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அளவுக்கு மீறி ஆசைப்படுகிறார்...' என ஜன் சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் குறித்து பேசுகின்றனர், பீஹார் மாநில மக்கள்.

பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர், இம்மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.

இவருக்கும் திடீரென அரசியல் ஆசை வர, பீஹாரில் 2024ல், ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி துவக்கினார். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இவரது கட்சி, 238 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது; ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

'பல கட்சிகளுக்கு வெற்றி வியூகம் வகுத்து கொடுத்தவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே...' என, அவரது ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் பீஹாரின் பங்கிபூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி சார்பில், பிரசாந்த் கிஷோரே களம் இறங்கினார்; எதிர் பாராத திருப்பமாக வெற்றியும் பெற்றார்.

இதனால், உற்சாகத்தில் இருக்கும் பிரசாந்த் கிஷோர், 'பீஹார் முதல்வர் பதவி மட்டுமல்ல, பிரதமர் பதவியும் நம்மை தேடி வரும்...' என, தன் கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பீஹார் மக்களோ, 'ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us