தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'கருப்பு ஆடு யார்?'

 'கருப்பு ஆடு யார்?'

 'கருப்பு ஆடு யார்?'


PUBLISHED ON : செப் 28, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2026 02:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கட்சி நிர்வாகிகளை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.

கேரளாவில், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு படுதோல்வி அடைந்தது.

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக, மா.கம்யூ., கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது. 'காரசாரமான விவாதங்கள் நடக்கும் என்பதால், இதில் பேசப்படும் விஷயங்கள் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும்' என, அக்கட்சி தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்காக, கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் தொடங்கியதுமே, அங்கு நடந்த விஷயங்கள் குறித்த செய்திகள், 'டிவி' சேனல்களில் உடனுக்குடன் வெளியாகின. கூட்டம் முடிந்ததும், இது குறித்த தகவல் அறிந்த பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

'நம் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான், விஷயங்களை 'டிவி' சேனல்களுக்கு தெரிவித்துள்ளார். இப்போது நம் பலவீனம் மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரிந்து விட்டது. அந்த கருப்பு ஆடு யார்...?' என, மா.கம்யூ., கட்சி தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us