sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பழிவாங்கும் படலம்!

 பழிவாங்கும் படலம்!

 பழிவாங்கும் படலம்!


PUBLISHED ON : மார் 27, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2026 03:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதா...' என, கொந்தளிக்கிறார், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சியில், அம்மாநில தலைநகர் ஹைதராபாதில் கார் பந்தயம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் இருந்து, 55 கோடி ரூபாய், வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அந்த போட்டியே ரத்து செய்யப்பட்டது.

தற்போது, முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளாார். இதையடுத்து, தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த ராமா ராவ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம்.

இதனால், கலக்கம் அடைந்துள்ள ராமா ராவ், 'உலகளவில், ஹைதராபாதை கார் பந்தய வரைபடத்தில் இடம் பெற செய்யவே, கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது; இதை ஊழல் என்கின்றனர். பழிவாங்கும் நோக்கத்துடன், தெலுங்கானா காங்கிரஸ் அரசு, என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது...' என, புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us