sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அரசியல் எதுவும் இல்லை!

 அரசியல் எதுவும் இல்லை!

 அரசியல் எதுவும் இல்லை!


PUBLISHED ON : பிப் 27, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2026 04:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாநிலத்தின் பெயரை மாற்றும் விஷயத்தில் கூட, மத்திய அரசு எங்களிடம் அரசியல் நோக்கத்துடன், பாரபட்சமாக செயல்படுகிறது...' என, கோபத்தில் குமுறுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

கேரள மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றம் செய்யக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இதை பரிசீலித்த மத்திய அரசு, பெயர் மாற்றம் செய்ய, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த விவகாரம், மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சியான திரிணமுல் காங்., கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரிணமுல் கட்சியினர் கூறுகையில், 'மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என மாற்றும்படி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில், மேற்கு வங்கத்துக்கு ஒரு நீதி, கேரளாவுக்கு ஒரு நீதியா...' என, கொந்தளிக்கின்றனர்.

மத்திய அரசு தரப்பிலோ, 'பங்க்ளா என்ற வார்த்தையும், நம் அண்டை நாட்டின் பெயரான பங்களாதேஷ் என்பதும் ஒரே மாதிரி உள்ளன. இதில் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மேற்கு வங்க அரசின் தீர்மானம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இதில் அரசியலும் இல்லை; ஒரு கத்தரிக்காயும் இல்லை...' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us