sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ இனி புதுமுகம் இல்லை!

இனி புதுமுகம் இல்லை!

இனி புதுமுகம் இல்லை!


PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பரவாயில்லையே... பதவிக்கு புதியவராக இருந்தாலும், எதிர்க்கட்சியினரை எப்படி சமாளிப்பது என்ற வித்தையை விரைவிலேயே தெரிந்து கொண்டு விட்டார்...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவை பாராட்டுகின்றனர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள்.

ம.பி.,யில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஏற்கனவே முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என, அனைவரும் நினைத்தனர்.

ஆனால், புதுமுகமான மோகன் யாதவை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம். 'நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவரை முதல்வராக்கியுள்ளனர்...' என, எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, பா.ஜ.,வுக்குள்ளும் முணுமுணுப்பு எழுந்தது.

இந்நிலையில் தான், சமீபத்தில் ம.பி.,யில் ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கு, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, போலீசார், 'சல்யூட்' அடிக்கும் நடைமுறை இருந்தது. இதை பிரச்னையாக்கி, அரசியல் ஆதாயம் தேட, காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர்.

இதையறிந்த மோகன் யாதவ், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டி, 'சல்யூட்' நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இதை கேள்விப்பட்ட ம.பி., மக்கள், 'மோகன் யாதவ் தேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார். இனி அவரை புதுமுகம் என, யாரும் விமர்சிக்க முடியாது...' என்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us