sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பெருமை பேசும் நாயுடு!

பெருமை பேசும் நாயுடு!

பெருமை பேசும் நாயுடு!


PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஏற்கனவே, நான் சொல்லிதான் இந்தியாவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என, தம்பட்டம் அடித்து வருகிறார். இப்போது இதை வேறு சொல்கிறாரா...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து பேசுகின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.

சந்திரபாபு நாயுடு, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதை சுட்டிக்காட்டும் வகையில், சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, 'தெலுங்கு தேசம் கட்சி அறிவித்த பல திட்டங்களை, பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பின்பற்றின. நாட்டின் வளர்ச்சியில் எங்களுக்கு முக்கிய பங்கு உண்டு...' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பேசிய சந்திரபாபு நாயுடு, 'யோகா கலையை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க, பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும்...' என, கோரிக்கை வைத்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஆந்திர எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், 'தப்பித்தவறி யோகாவை ஒலிம்பிக் போட்டியில் சேர்த்துவிட்டால், உலகமே நான் சொல்வதைத் தான் கேட்கிறது என, சந்திரபாபு நாயுடு பெருமை அடிப்பாரே...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us