sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ இவருக்கா இந்த நிலை?

இவருக்கா இந்த நிலை?

இவருக்கா இந்த நிலை?


PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாவம், இவரை இப்படி நடுத்தெருவில் நிறுத்தி விட்டனரே...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.எல்.சி., கவிதா பற்றி பரிதாபத்துடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார். 2023ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் இவரது கட்சி படுதோல்வி அடைந்தது.

அவரது மகள் கவிதா, டில்லி மதுபான கொள்கை ஊழலில் சிக்கி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் போராட்டத்துக்கு பின், ஜாமினில் வெளியில் வந்தார்.

சமீபகாலமாக கவிதா, தன் தந்தை மீதும், தன் சகோதரரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை, பா.ஜ.,வுடன் இணைக்க முயற்சிப்பதாக அவர் கூறியது, அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெலுங்கானாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 42 சதவீத இடஒதுக்கீடு தர வலியுறுத்தி, ஹைதராபாதில் கவிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதில், கட்சி நிர்வாகிகள் யாருமே பங்கேற்கவில்லை. உண்ணாவிரத பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது.

பந்தலில் தனியாக அமர்ந்திருந்த கவிதாவை பார்த்து, 'இவருக்கா இந்த நிலை...' என, கட்சியினர் முணுமுணுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us