தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி!

 பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி!

 பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி!


PUBLISHED ON : மார் 23, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியல் வாரிசுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் தந்து விட்டதே நீதிமன்றம்...' என, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான யதீந்திரா பற்றி கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது மகன் யதீந்திரா, அங்கு எம்.எல்.சி.,யாக உள்ளார்.

சித்தராமையாவுக்கு, தன் மகனை அரசியலில் பெரிய தலைவராக்கி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது. தந்தையின் மனநிலையை நன்கறிந்த யதீந்திரா, அதற்கு தகுந்தது போல் காய் நகர்த்தினார். தந்தையின் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில், அவர் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதிகாரிகள் இடமாறுதல் விஷயங்களில் யதீந்திரா நேரடியாக தலையிட்டதாக, பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இப்படி இடமாற்றம் செய்யப்பட்ட சில அதிகாரிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சமீபத்தில் இது தொடர்பான ஒரு வழக்கில், 'அரசு ஊழியர்கள், அதிகாரிகள் இடமாற்றங்கள் போன்ற நிர்வாகம் தொடர்பான விஷயங்களில், முதல்வரோ, அவருடன் தொடர்புடையவர்களோ ஈடுபடக் கூடாது...' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அதிர்ந்து போன யதீந்திரா ஆதரவாளர்கள், 'நம் தலைவரின் பதவி ஆசைக்கு, நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டதே...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us