தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ ராஜதந்திரங்கள் வீண்!

 ராஜதந்திரங்கள் வீண்!

 ராஜதந்திரங்கள் வீண்!

1


PUBLISHED ON : செப் 24, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2026 02:10 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இவ்வளவு சிரமப்பட்டு பதவியை பெற்றும், பலனில்லாமல் போய் விட்டதே...' என கவலைப்படுகிறார், கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிவகுமார்.

சித்தராமையாவிடமிருந்து, முதல்வர் பதவியை பெறுவதற்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை செய்தும், கடந்த ஜூன் மாதம் தான், சிவகுமாரால், அதை பெற முடிந்தது.

முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, 100 நாட்கள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், சமீபத்தில், பெங்களூரு வீதிகளில் நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார், சிவகுமார்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம், 'நான் யார் என தெரிகிறதா...' என, சிவகுமார் கேட்டார். அதற்கு அந்த பெண், 'தெரியவில்லையே...' என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'நீங்கள் தினமும், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கிறீர்கள்; அதற்கு யார் காரணம் தெரியுமா...' என, அடுத்த கேள்வியை கேட்டார்.

அதற்கு அந்த பெண், சற்றும் யோசிக்காமல், 'தெரியுமே; சித்தராமையா தான் காரணம்...' என்றார். சிவகுமாருக்கும், அவருடன் சென்ற அதிகாரிகளுக்கும் தர்மசங்கடமாகி விட்டது.

'இவ்வளவு பாடுபட்டு முதல்வராக பதவியேற்றும், நம்மை யார் என்று கூட பலருக்கு அடையாளம் தெரியவில்லையே; அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகி விட்டனவே...' என, நடையை கட்டினார் சிவகுமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us