sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ ஆட்சியை பிடிக்க முடியுமா?

 ஆட்சியை பிடிக்க முடியுமா?

 ஆட்சியை பிடிக்க முடியுமா?


PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முக்கிய பதவியில் இருப்பவர், கொஞ்சம் பொறுப்பாக செயல்படக் கூடாதா...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பற்றி வருத்தப்படுகின்றனர், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த காங்., நிர்வாகிகள்.

ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலம், 25 ஆண்டுகளுக்கு முன், காங்கிரசின் கோட்டையாக இருந்தது. கடைசியாக, 2000ல், காங்கிரசைச் சேர்ந்த, ஹேமானந்த பிஸ்வால் என்பவர் ஒடிஷா முதல்வராக பதவி வகித்தார்.

அதன்பின் நடந்த எந்த தேர்தலிலும், அங்கு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இங்கு, அடுத்த சட்டசபை தேர்தல், 2029ல் நடக்கவுள்ளது. இதில், எப்படியாவது வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விட வேண்டும் என, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக, கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அவரும் முதல் கட்டமாக, ஒடிஷாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்துள்ளார்.

ஆனால், புதிய நிர்வாகிகளில் பலர், உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களை சேர்ந்தவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்துள்ளது.

'நிர்வாகிகள் நியமனத்திலேயே இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இந்த ஜென்மத்தில், ஒடிஷாவில் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியாது...' என்று புலம்புகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us