பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
ADDED : 18 minutes ago
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் கொரட்டலா சிவா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் அடுத்தடுத்து சிறந்த இசை ஆல்பங்களை வழங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஆகாசம்லோ ஒக தாரா படத்திற்கு அமைத்த இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இருப்பினும், மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு இசையமைப்பது என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சவாலாக இருக்கும். இந்த முழுநீள மாஸ் என்டர்டெய்னர் படத்தை ஜி.வி.பிரகாஷ் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.