அப்பா, மகன் இருவருக்குமே கிடைத்த மிதமான வெற்றி
மலையாள நடிகர்களான மம்முட்டி தமிழில் நடித்த 'ஓ.ம்', அவரது மகன் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த 'ஆகாசம்லோ ஒக தாரா' ஆகிய படங்கள் இந்தியத் திரையுலகத்தின் ஆச்சரிய வெளியீடுகளாக, கடந்த வாரம் நவம்பர் 20ல் வெளியாகின.
அப்பா மம்முட்டி தெலுங்கில் பேச, மகன் துல்கர் தமிழில் பேச இருவருமே பட வெளியீட்டிற்குப் பிறகு வீடியோ கூட வெளியிட்டிருந்தார்கள். இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
'ஓ.ம்' படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது. இருந்தாலும் படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கவில்லை, படமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
'ஆகாசம்லோ ஒக தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. படத்திற்குக் கிடைத்த விமர்சனங்களைப் பார்க்கையில் அது இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்காமல் இருப்பது டோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா மம்முட்டி, மகன் துல்கர் ஆகியோர் வேறு மொழிகளில் நடித்த படங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சற்றே ஏமாற்றத்தைத் தந்து மிதமான வெற்றிப் படக்ஙளாகவே அமைந்துள்ளது.