இசை போட்டியில் பாடியவருக்கு தனது இசை கல்லூரியில் வாய்ப்பளித்த ரஹ்மான்
ADDED : 14 minutes ago
'சோனி விழா' டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி 'தமிழ் ஐடல்'. இந்த நிகழ்ச்சியின் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் எபிசோடில் ஏ.ஆர்.ரஹ்மான் நடுவராக பங்கேற்றுள்ளார். அவருடன் கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரேமியா ஆகியோரும் இணைகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செல்வா மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் திறமையையும் எதிர்கால வாய்ப்புகளையும் உணர்ந்த ரஹ்மான், செல்வாவுக்கு கே.எம்.இசைக் கல்லூரியில் சேர்ந்து பயில அழைப்பு விடுத்தார். அந்தக் கல்லூரியின் கதவுகள் எப்போதும் அவர்களுக்காகத் திறந்திருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.