அமித் ஷா உடன் ‛ராமாயணா' படக்குழுவினர் சந்திப்பு
ADDED : 3 hours ago
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛ராமாயணா'. இந்தியா தாண்டி உலகளவிலும் இந்தபடம் பெரிய அளவில் திரையிடப்பட்டது. படம் வெளியானது முதல் வசூலை குவித்து வருகிறது. தற்போது வரை 1800 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ராமாயணா படக்குழுவினர் டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ரன்பீர் கபூர், சாய் பல்ல்வி, நிதேஷ் திவாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ராமாயணா படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்காக படக்குழுவினரை பாராட்டி உள்ளார் அமித்ஷா.