உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜுன் மகள் குறித்து அவதூறு : பயில்வான் ரங்கநாதனிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை

அர்ஜுன் மகள் குறித்து அவதூறு : பயில்வான் ரங்கநாதனிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை

நடிகர் அர்ஜுர்னின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சில படங்களில் நடித்த இவர். கடந்த ஆண்டு குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பிரிந்து விட்டதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. குறிப்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் வீடியோவில் ஐஸ்வர்யா குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இது நடிகர் அர்ஜு ன் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது மகள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அர்ஜுன் கடந்த 19-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.

இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் பயில்வான் ரங்கநாதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணைநடத்தி, அவர் பதிவிட்ட வீடியோக்கள் குறித்து விளக்கம் பெற்றுள்ளனர். பின்னர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !