ராஜா ராணிக்கு பின் காதல் படம் : ஆர்யா சொன்ன தகவல்
மலையாள இயக்குனரா நிகில் முரளி இயக்க, ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நடிக்கும் ‛ஹலோ காதல்' படம் டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆகிறது. இது ரொமான்டிக், காமெடி ஜானரை சேர்ந்தது. படம் குறித்து ஆர்யா பேசியது...
மறைந்த இயக்குனர் ஜீவா உள்ளம் கேட்குமே படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அது காதல் படம். அவர் உயிரோடு இருந்தால் நிறைய மாறுபட்ட காதல் படங்களை இயக்கியிருப்பார். நானும் சில ஆண்டுகளாக காதல் படங்களில் நடிக்கவில்லை. என் மனைவி அப்படிப்பட்ட ஒரு கதையில் நடிக்கணும் என சொன்னார். ஒரு நாள் ஏர்போர்ட் செல்லும்போது இந்த கதை கேட்டு ஓகே சொன்னேன்.
தமிழ் வசனங்களை ஹலீதா எழுதியிருக்கிறார். இயக்குனர் நிகில் முரளி 'பிரணய விலாசம்' என்ற மலையாள படத்தை இயக்கியவர், அது அருமையான கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம், 'ராஜா ராணி'க்கு அப்புறம் இப்பதான் ஒரு லைட்-ஹார்ட்டட் படம் பண்றேன். நானும் ஜி.வி.பிரகாசும் நல்ல நண்பர்கள். மச்சான், ஒரு கதை கேட்டிருக்கேன். தயவுசெய்து நீ கதை கேட்டுட்டு மியூசிக் போட்டுக் கொடுடா அப்படின்னு சொன்னேன். அவர் ஓகே சொன்னார். அவருக்கு நன்றி, ஏன்னா, அவரு 15 படத்துக்கு மியூசிக் போடுறாரு, 10 படத்துல நடிக்கிறா, அதுல அஞ்சு பட தயாரிக்கிறார். ஆனாலும் நம்ம டீம்ல இருந்து யாரு கால் பண்ணாலும் சரி, ஒரு மெசேஜ் பண்ணாலும் நெக்ஸ்ட் பைவ் மினிட்ஸ்ல ரிப்ளை வரும். 'ஓரம் போ' காலத்திலிருந்து அவருடன் டிராவல் பண்ணிட்டு இருக்கோம். நிகிலா விமல் அருமையாக நடிச்சு இருக்காங்க. அடுத்து என் நடிப்பில் வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 வருது'' என்றார்.