சினிமா வரலாற்றில் முதன்முறையாக 18 திரையரங்கு வடிவங்களில் வெளியாகும் 'வாரணாசி'
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக ராஜமவுலி டைரக்சனில் உருவாகி வரும் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் என நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிக்கின்றனர். வரும் ஏப்ரல் 7ம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தனது ஒவ்வொரு படத்திலும் தொழில்நுட்ப விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ராஜமவுலி, 'வாரணாசி' திரைப்படத்தை உலகம் முழுவதும் 18 திரையரங்கு வடிவங்களில் வெளியிடத் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
குறிப்பாக ஐமேக்ஸ், டால்பி விஷன் மற்றும் 4DX உள்ளிட்ட பிரீமியம் வடிவங்களில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இது சர்வதேசச் சந்தைகளில் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப் பல்வேறு வடிவங்களில் படம் வெளியாக இருப்பதால் தொழில்நுட்பக் குழுவுக்குக் கூடுதல் சுமை என்றாலும், வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் எனக் காலக்கெடுவை நிர்ணயித்துச் செயல்பட்டு வருகின்றனராம்.