உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்கள் முன்னிலையில் நவ., 27ல் புதிய படம் குறித்து அறிவிக்கும் கிச்சா சுதீப்

ரசிகர்கள் முன்னிலையில் நவ., 27ல் புதிய படம் குறித்து அறிவிக்கும் கிச்சா சுதீப்

கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த சில வருடங்களாகவே உருவாகி வந்த பில்லா ரங்கா பாஷா திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது தெரியாமல் இருக்கிறது. இது தவிர கடந்த செப்டம்பர் மாதம் அவரது பிறந்தநாளன்று தேவராயா என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரத்தில் சுதீப் நடிக்கிறார். இன்னொரு பாக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்த நிலையில் தனது புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட விழா நடத்தி வரும் நவம்பர் 27ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கிச்சா சுதீப்..

மேலும் பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் நடைபெறும் இந்த விழாவுக்கு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுதீப். ஏற்கனவே சுதீப் நடித்த வில்லன் மற்றும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்த கேடி தி டெவில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரேம் தான் இந்த படத்தை இயக்குகிறார்.. மற்ற விபரங்கள் அனைத்தும் நவம்பர் 27ஆம் தேதி சுதீப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !