உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு வருடங்களுக்குப் பிறகு விற்கப்பட்ட 'தேவரா' சாட்டிலைட் உரிமை?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு விற்கப்பட்ட 'தேவரா' சாட்டிலைட் உரிமை?

கொரட்டலா சிவா இயக்கத்தில், என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் 2024ல் வெளிவந்த பான் இந்தியா தெலுங்குப் படம் 'தேவரா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்டு முதல் பாகம் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்றார்கள். இரண்டு பாகம் பற்றி கடந்த இரண்டு வருடங்களாக எந்தத் தகவலும் இல்லை.

தெலுங்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படமாக இருந்தாலும் இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை கடந்த இரண்டு வருடங்களாக விற்கப்படாமலே இருந்தது. தற்போது சோனி டிவி தெலுங்கு இந்த உரிமையை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தமிழில் தனது ஒளிபரப்பை ஆரம்பித்த சோனி டிவி, அடுத்ததாக தெலுங்கிலும் டிவியை ஆரம்பிக்க உள்ளார்களாம். மேலும் சில புதிய படங்களின் உரிமைகளையும் அந்நிறுவனம் பேசி வருகிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !