உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு'

பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு'

1964ம் ஆண்டு வெளியான படம் 'பச்சை விளக்கு'. ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜி கணேசன், சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சவுகார் ஜானகி, எஸ்.வி.ரங்கராவ், நாகேஷ் ஆகியோர் நடித்தனர். ஒரு ரெயில் என்ஜின் டிரைவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி, வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் விளம்பரத்தில் ஆரம்பத்தில் டைட்டில் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக ஒரு ரெயில்வே மேன் பச்சை விளக்கை பிடித்திருப்பது போன்ற படத்துடன் விளம்பரம் செய்தனர். படம் வெளியீட்டுக்கு சில வாரங்கள் முன்புதான் 'பச்சை விளக்கு' என்ற டைட்டிலை வெளியிட்டனர். படம் 8 ஆயிரம் அடி எடுக்கப்பட்ட பிறகு இயக்குநர் பீம்சிங்கிற்கு திருப்பதியாக இல்லை. புதிய கதை களம் என்பதால் தடுமாறினார். இதனால் தயாரிப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் படத்தை போட்டுக்காட்டி அவரது ஆலோசனைப்படி செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி எடுத்த வரையில் உள்ள படத்தை அவருக்கு போட்டுக் காட்டினார்கள். அவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் சில யோசனைகளை சொன்னார். அவர் சொன்னபடி ஏவிஎம்.ராஜன் - புஷ்பலதா ஜோடிகள் படத்தில் சேர்க்கப்பட்டனர். அதற்கேற்ப கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதுவரை எடுக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் அடி காட்சியும் நீக்கப்பட்டது. ரயில் என்ஜினின் உள்பகுதியாக போடப்பட்டிருந்த ஷெட் அப்போது பரவலாக பேசப்பட்டது. ‛ஒளிமயமான எதிர்காலம்' உள்ளிட்ட காலத்தால் அழியாத பாடல்கள் இந்த படத்தில் தான் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !