இறப்பதற்கு முன் கடைசியாக மோகன்லாலிடம் வீடியோ காலில் பேசிய ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார்
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார் (57) வயதில் நேற்று முன்தினம் திடீரென காலமானார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் படங்களில் பணியாற்றியுள்ள ஷாஜி குமார், 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'நரன்' படத்தில் இருந்து, மோகன்லாலின் சூப்பர் ஹிட் படங்களான 'புலிமுருகன்', 'தொடரும்', விரைவில் வெளியாக இருக்கும் 'அதிமனோகரம்' உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவர் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட சமயத்தில் தான் நலமாக இருப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும் தான் உடல்நிலை தேறிவிட்டதை நடிகர் மோகன்லாலிடம் தெரிவிப்பதற்காக அவருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.. அந்த உரையாடலின் போது அவர் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்ததாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மோகன்லாலிடம் பேசி முடித்துவிட்டு தூங்கச் செல்வதற்கு முன்பு கழிவறைக்குச் சென்றபோதுதான் திடீரென ஷாஜி குமார் மயங்கிச் சரிந்துள்ளார்.. அதன் பிறகே அவர் உயிர் பிரிந்தது..