தன் பட நிறுவன பூஜைக்கே வராத அஜித்
தான் நடிக்கும் பட பூஜை, பாடல் வெளியீட்டு விழா, சினிமா நிகழ்ச்சிகளுக்கு அஜித் வருவது இல்லை. தனதுபடம் குறித்து பேசுவது இல்லை. இதை பல ஆண்டுகளாக பாலோ பண்ணுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் டேர் டெவில் பட பூஜை சில தினங்களுக்குமுன்பு நடந்தது. இந்த படத்தை அவரே தயாரிக்கிறார். அதாவது ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளர். இந்த படப்பூஜை சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் நடிக்கும் பிரபு, பார்த்திபன், சுனில், நடிகை ஸ்ரீலீலா உட்பட பலரும் கலந்துகொண்டனர். தயாரப்பாளர் என்ற முறையில் ஷாலினியும் தனது மகனுடன் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல் அஜித் வரவில்லை. மற்ற படங்களின் பூஜைக்கு வராதவர், தன் சொந்த பட பூஜைக்கு வந்தார் என விமர்சனங்கள் வரும் என்பதால், அவர் விழாவுக்கு வரவில்லை என தகவல். தனது கார் ரேஸ் குறித்து அஜித் பேட்டி கொடுக்கிறார். அதற்கு ஆதரவு வேண்டும் என பேசுகிறார். இது அவரின் மாறுபட்ட முடிவை காண்பிக்கிறது என்றும் விமர்சனங்கள் வந்துள்ளன.