உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜான் டோ'விற்காக மதுமிதாவிடம் திட்டு வாங்கியது குறைவு : அர்ஜூன் தாஸ்

‛ஜான் டோ'விற்காக மதுமிதாவிடம் திட்டு வாங்கியது குறைவு : அர்ஜூன் தாஸ்

மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் படம் ‛ஜான் டோ'. படம் குறித்து அர்ஜூன் தாஸ் கூறுகையில், ‛‛இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் ஆக நடிக்கிறேன். இதற்கு முன்பு மதுமிதா இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறேன். அவர் எப்படி பணியாற்றுவார் என தெரியும். அதனால் இந்த படத்தில் திட்டு வாங்கியது குறைவு. ‛போதுமா' என்ற பாடலையும் பாடியிருக்கிறேன். என் தங்கையும் அந்த பாடலில் இணைந்து பாடியிருக்கிறார்.

விஜே அர்ச்சனா மீது தனிபாசம் உண்டு. கைதி படத்துக்காக நான் முதலில் விருது வாங்கினேன்..இதில் அவர் எனக்கு அம்மாவாக வருகிறார். அவர் மகள் சாராவுக்கும் முக்கியமான கேரக்டர். சஞ்சனா நடராஜனும் போலீஸ் ஆக வருகிறார். இந்த மாதம் 13ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. மதுமிதா முதல் படத்திற்கு என்னை ஆடிசன் வைத்து எடுத்தார். இந்த படத்துக்கு ஸ்கிரிப் ரீடிங் எடுத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !