உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை

தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளனர் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வரிகள் மற்றும் பராமரிப்பு கட்டணம் சேர்க்காமல் தற்போது இருக்கும் 150 ரூபாய் கட்டணத்தை 250 ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அது மட்டுமல்ல, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 10 சதவீத கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டணம் 6 ரூபாயிலிருந்து 10 ரூபாய் உயர்த்த வேண்டும், சினிமா தியேட்டர்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் அடக்கம்.

தியேட்டர்களில் விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்புவது மற்ற விழாக்களை நடத்த அனுமதிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

மீண்டும் காலை 6 மணி காட்சிகள் வேண்டும் என்றும் கேட்டுக கொண்டுள்ளார்கள்.

மின்சாரண கட்டணம், சொத்து வரி, இதர வரிகள், பராமரிப்பு கட்டணம், ஓடிடி போட்டி ஆகியவற்றால் தியேட்டர்களை நடத்துவது பாதிப்புக்குள்ளாகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த கோரிக்கைகளில் எது நிறைவேற்றப்படும் என்பது தீபாவளிக்கு முன்னதாகவும் தெரிய வாய்ப்பிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-10-31 16:31:48

டிக்கெட் கட்டணம் ஏற்றும் போது மின் கட்டணம் எதற்காக குறைக்க வேண்டும் இரு மடங்கு வசூல் செய்ய வேண்டும்