உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கர்நாடகாவில் 'ராமாயணா' படத்தை விநியோகிக்கும் நடிகர் யஷ்!

கர்நாடகாவில் 'ராமாயணா' படத்தை விநியோகிக்கும் நடிகர் யஷ்!


நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா: ரைஸ் ஆப் ஏ லெஜெண்ட்'. நவம்பர் 5ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் நடித்து, தயாரித்தும் வரும் யஷ், தற்போது தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் இப்படத்தை விநியோகமும் செய்யவுள்ளார்.

தனது மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், இப்படத்தின் விநியோகத்தைப் மிகப்பெரிய அளவில் மேற்கொள்கிறார் யஷ். விநியோகஸ்தராக அவரது முதல் படம் 'டாக்சிக்' ஆகும். அதைத் தொடர்ந்து ராமாயணா படத்தின் முதல் பாகம் அவரது இரண்டாவது படமாகும். மிகப்பெரிய அளவிலான உருவாக்கம் மற்றும் சிறப்பான விளம்பரங்களால் ராமாயணா படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார்.

இந்த காவியப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் ஹனுமானாகவும் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !