உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவசரப்படாமல் உஷாராக இருக்கும் நடிகை

அவசரப்படாமல் உஷாராக இருக்கும் நடிகை


ஆக்ஷன் கிங் நடிகருடன்,வெடி என்ற பொருள் கொண்ட நான்கெழுத்து படம் மற்றும் 'ஹார்ட்' என்ற அர்த்தம் தரும் படம், அன்பை சொல்கிற படம் என, இதுவரை, அந்த நடிகை நடித்து வெளியானது மூன்று படங்கள் மட்டும் தான்.

இந்நிலையில், முன்வரிசை நடிகர்களை அனுசரித்து நடந்துகொண்டால், மின்னல் வேகத்தில், 'நம்பர் ஒன்' நாற்காலியைக் கைப்பற்றிவிடலாம் என்ற, தன் மேனேஜரின் சொல்லைக் கேட்டு, சில, 'ஹீரோ'களுடன் அடுத்தடுத்து ரகசிய சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

ஆனால், காரியம் முடிந்த பின், மேற்படி நடிகர்கள், அம்மணியைக் கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, தன் மேனேஜரை விரட்டியடித்துவிட்டு, இப்போது, தனக்குத் தானே மேனேஜர் ஆகிவிட்டார். அதோடு, 'அட்ஜஸ்ட்மென்ட்' விவகாரத்தில் அவசரப்படாமல் உஷாராகவும் செயல்படத் துவங்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !