உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிவின் பாலி, சூரியின் வெற்றிப் பயணம் தொடருமா?

நிவின் பாலி, சூரியின் வெற்றிப் பயணம் தொடருமா?


மலையாளத் திரையுலகத்தில் இந்த வருடத்திய சாதனை, ஆச்சரிய வெற்றியைக் கொடுத்தவர் நிவின் பாலி. தமிழ்த் திரையுலகத்தில் இந்த வருடத்திய சாதனை, ஆச்சரிய வெற்றியைக் கொடுத்தவர் சூரி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தமிழ்ப் படம் நாளை அக்டோபர் வெளியாகிறது.

ராம் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் 2024ம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரிமியர் காட்சியாக திரையிடப்பட்டது. படம் முடிந்து ஓரிரு வருடங்களாகியும் வெளியாகாமல் தாமதமாகி வந்தது.

இப்போது சரியான ஒரு கால கட்டத்தில் இப்படம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் வசூல் சாதனை புரிந்த நிவின் பாலி, தமிழில் வசூல் சாதனை புரிந்த சூரிய ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் இப்படம் மீதான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் நன்றாக இருந்துவிட்டால் இரண்டு மொழிகளிலும் வரவேற்பைப் பெறும். அவர்களின் வெற்றிப் பயணம் இந்த 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கும் அமைந்தால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-09-30 16:44:25

படம் நிச்சயம் நல்லா தான் இருக்கும். ராம் நிச்சயமா நல்லா தான் எடுத்து இருப்பார் பட் commercial ஆ இருக்குமா என்பது சந்தேகம் தான். சினிமா ரசிகர்களுக்கு நல்ல படமா இருக்கும் ஹீரோ worshippers க்கு அவுங்க எதிர் பார்ப்பது இருக்காது .. bgm cinematography எல்லாம் நல்லா இருக்கும். ஊற ஊற தான் ஊறுகாய் நல்லா இருக்கும். பட் படம் ரெண்டு வருஷம் எல்லாம் ஊறிச்சினா ஊசி போகவும் நிறைய chances இருக்கு.