அட்லி பிறந்தநாளை முன்னிட்டு 'ராக்கா' டீசர் வெளியிடத் திட்டம்!
அட்லி இயக்கத்தில் தற்போது அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் 'ராக்கா'. எந்தவித கவன சிதறலும் இன்றி இப்படத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் அல்லு அர்ஜூன். தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, வருகிற செப்டம்பர் 21ம் தேதி இயக்குனர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ராக்கா' படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ராக்கா' உலகத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இயக்குனர் அட்லியின் பிறந்தநாளில் அதை வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ராக்கா படம் சர்வதேச அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் பணிகளில் ஹாலிவுட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், சண்டைக்காட்சிகளை சர்வதேச ஆக்ஷன் நிபுணர்கள் வடிவமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரபலமான ஒரு ஹாலிவுட் நடிகர் இப்படத்தில் இணையக்கூடும் என்றும் பேசப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.