உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில்

நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில்

நடிகை வடிவுக்கரசிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அப்படி, இப்படி என கோலிவுட்டில் வதந்தி பரவியது. வழக்கம்போல் சில யுடியூபில் வீடியோ தவறாக வந்தது. சமீபத்தில் கான்சிட்டி பட விழாவில் வடிவுக்கரசி பேசிய பேச்சுகள் வைரல் ஆன நிலையில், அவருக்கு என்ன ஆனது என்று பலரும் தவித்தனர். அவருடைய நண்பர்கள், அவருக்கு போன் செய்தனர்.

இந்நிலையில் வடிவுக்கரசி வெளியிட்ட ஆடியோ பதில் '' எனக்கு ஏகப்பட்ட தம்பிகள், நண்பர்கள், ரசிகர்கள் ஆதரவு இருக்கும்போது என்ன நடக்கப்போகுது. நான் நல்லா இருக்கிறேன். காலையில் கமல் சார் பேசி விசாரித்தபோது நான் கொஞ்சம் பயந்தேன். நான் இப்ப சினிமா, சீரியலில் பிஸியாக இருக்கிறேன். அடுத்து பிரபு, சுகன்யா நடிக்கும் படத்தில் நடிக்க காரைக்குடிக்கு போக தயாராகிட்டு இருக்கிறேன். அதில் பிரபுவின் அம்மாவாக நடிக்கிறேன். சமீபத்தில் கார்த்திக்கை தீபம் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தேன். எனக்கு இவ்வளவு போன் வருகிறது, என்னை பற்றி ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார்கள். எனக்காக இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !