ரூ.300 கோடி கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மலையாளத் திரையுலகத்தில் இதுவரையில் ஒரே ஒரு படம்தான் 300 கோடி வசூலைக் கடந்த ஒரு படமாக இருந்தது. அந்தப் படம் கடந்த 2025ம் வருடம் வெளிவந்த 'லோகா சாப்டர் 1 -சந்திரா'. அந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்க, கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத் திரையுலகத்தின் இத்தனை வருட வரலாற்றில் கதாநாயகர்கள் புரியாத வசூல் சாதனையை ஒரு கதாநாயகி புரிந்தார்.
முதல் 300 கோடி வசூலான ஒரு வருடத்தில் மீண்டும் மற்றுமொரு 300 கோடியை மலையாள சினிமா ஒன்று வசூலித்துள்ளது. அந்தப் படத்தையும் நடிகர் ஒருவர் தான் தயாரித்துள்ளார். அவர் தான் பஹத் பாசில். அவரது நண்பர்களுடன் இணைந்து தயாரித்த படம் அது. கடந்த மாதம் ஆகஸ்ட் 21ல் வெளியான அந்தப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. கிரிஷ் எ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அப்படம் தற்போது 300 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மூத்த நடிகர்கள் செய்யாத ஒரு சாதனையை இளம் நடிகரான நிவின் பாலி செய்திருக்கிறார். மலையாளத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான இப்படம் பலரையும் கவர்ந்த ஒரு படம்.