உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஹானா கிருஷ்ணா திருமணம்: ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை மணந்தார்

அஹானா கிருஷ்ணா திருமணம்: ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை மணந்தார்


வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகை அஹானா கிருஷ்ணா. 'ஞான் ஸ்டீவ் லோபஸ், லூக்கா, பதினெட்டாம் படி, லோகா சாப்டர் 1: சந்திரா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை கடந்த 10 வருடமாக காதலித்து வந்தார். நிவீஷ் ரவி, கிங் ஆப் கோதா, லக்கி பாஸ்கர், லோகா சாப்டர் 1: சந்திரா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, துல்கர் சல்மான் உள்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அஹானா கிருஷ்ணா, நிமிஷ் ரவியைத் தனது 20வது வயதில் சந்தித்ததாகவும் 10 வருடங்கள் காதலித்து 30வது வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !