ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் 'மகாராஜா'
கடந்த 2024ம் ஆண்டில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான படம் 'மகாராஜா'. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது. சீன மொழியில் கூட டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர். அங்கும் வரவேற்பை பெற்றது.
இதன் 2ம் பாகத்தை உருவாக்கும் பணியில் இயக்குனர் நிதிலன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மகாராஜா படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று ரூ.15 கோடி கொடுத்து மகாராஜா படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. விஜய் சேதுபதி ரோலில் மேத்யூ மெக்கானாகே நடிக்கிறார்.