உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 - அண்ணனுக்கு இரண்டு வெற்றி, தம்பிக்கு இரண்டு தோல்வி

2026 - அண்ணனுக்கு இரண்டு வெற்றி, தம்பிக்கு இரண்டு தோல்வி


2026ம் ஆண்டில் எதிர்பாராத சில படங்கள் வெற்றிகரமாக ஓடுவதும், எதிர்பார்த்த சில படங்கள் தோல்வி அடைவதும் திரையுலகினருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியால் தவித்து வந்த சூர்யாவுக்கு இந்த வருடம் 'கருப்பு' படம் 340 கோடி வசூலையும், அடுத்து வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 240 கோடி வசூலையும் கொடுத்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைத் தந்தது. மூன்றாவதாக நவம்பர் 6ம் தேதி 'சீன்' படம் வெளியாக உள்ளது.

அண்ணன் சூர்யாவுக்கு இந்த வருடம் டபுள் வெற்றியைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியும் கிடைக்குமா என காத்திருக்கிறார்கள். ஆனால், அவரது தம்பி கார்த்திக்கு இந்த வருடம் வெளிவந்த 'வா வாத்தியார்' மற்றும் கடந்த வாரம் வெளியான 'சர்தார் 2' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 'சர்தார் 2' படத்தின் சறுக்கலை இதற்கு மேலும் காப்பாற்ற முடியாது என திரையுலகினர் சொல்கிறார்கள்.

2023ல் வெளியான 'ஜப்பான்' படத்தின் தோல்விக்குப் பிறகு, 2024ல் வெளியான 'மெய்யழகன்' படம் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் மீண்டும் இடம் பிடித்தார் கார்த்தி. ஆனால், அதற்கடுத்து அவரது தேர்வுகள் சரியாக அமையவில்லை.

தற்போது தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம்தான் அவரை மீண்டும் மீட்டுக் கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !