உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பர் 10ல் வருவதும், போவதும்….

செப்டம்பர் 10ல் வருவதும், போவதும்….

2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துள்ளது. வழக்கம் போலவே இந்த வாரமும் நான்கைந்து படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'டிமாண்டி காலனி 3' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் பெறப்பட்டு செப்டம்பர் 10ல் வெளியாகும் என ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் இப்படம் வெளியாகிறதா இல்லையா என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நிச்சயம் வெளியாகும் என்பதால் 'சர்தார் 2, மண்டாடி' ஆகிய படங்களின் விழாக்களை சமீபத்தில் நடத்தி விட்டார்கள். கார்த்தி, எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் பலர் நடித்துள்ள 'சர்தார் 2' படத்தை பிஎஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'மண்டாடி' படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.

இந்த இரண்டு முக்கிய படங்கள் தவிர வேறு சில சிறிய படங்கள் திடீரென வெளியாகலாம். கடந்த வாரமும் இப்படித்தான் சில படங்கள் கடைசி நேரத்தில் வெளியாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !