எங்க சங்கத்தில் இணைய வேண்டும் : ரஜினிக்கு சேரன் கோாரிக்கை
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவராக சேரன் செயல்படுகிறார். சமீபத்தில் இவர்கள் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து மற்றும் ஆலோசனை பெற்றனர். இந்நிலையில் தலைவரான இயக்குனர் சேரன், பொதுச் செயலாளரான ‛பட்டுக்கோட்டை' பிரபாகர், பொருளாளரான ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர்.
இதுபற்றி விசாரித்தபோது, ''இன்றைய கதை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசி அதை எப்படி எல்லோருடனும் பேசி சுமூகமாக எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்படி கையாள எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். திரையுலகில் வள்ளி, பாபா உட்பட கதையாசிரியராகவும் அவர் பணியாற்றி இருப்பதால் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று சம்மதமும் தெரிவித்தார். நேரம் ஒதுக்கி எங்களோடு உரையாடியவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்'' என்று சேரன் தரப்பில் தெரிவித்தனர்.