உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமரின் பெயரில் உருவாகும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனஸ்வரா ராஜன்

ராமரின் பெயரில் உருவாகும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனஸ்வரா ராஜன்


மலையாளத் திரையுலகில் கடந்த சில வருடங்களில் வளர்ந்து வரும் நடிகை இளம் நடிகையான அனஸ்வரா ராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'வித் லவ்' படத்தின் மூலம் தமிழிலும் வரவேற்பைப் பெற்றார். இன்னொரு பக்கம் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து அவரது மகள் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தெலுங்கில் உருவாகிவரும் 'அந்தா ராமுலோரு சூசுக்குண்டாரு' (எல்லாவற்றையும் கடவுள் ராமர் பார்த்துக் கொள்வார்) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அனஸ்வரா ராஜன்.

கதாநாயகனாக சங்கீத் சோபன் நடிக்கிறார். ஒரு அழகான கிராமத்து பின்னணியில் காதல் கதையாக உருவாகியிருப்பதை சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ உணர்த்தினாலும், இப்படத்தின் டேக்லைன் என்னவோ இது ஒரு காதல் கதை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'குமாரி 21 எப்' மற்றும் '18 பேஜஸ்' போன்ற படங்களை இயக்கிய சூரிய பிரதாப் இப்படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !