ஒரு வழியாக 3 வருடம் கழித்து ஓடிடியில் வெளியாகும் திலீப், தமன்னா படம்
ADDED : 9 hours ago
கடந்த 2023 நவம்பரில் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான படம் 'பாந்த்ரா. நடிகை தமன்னா முதல்முறையாக இந்தப் படம் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். திலீப்புக்கு 'ராம்லீலா' படம் மூலம் முதல் 100 கோடி ஹிட் கொடுத்த இயக்குனர் அருண்கோபி இயக்கினார். கமர்ஷியலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறத் தவறியது.
அதுமட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் வெளியான திலீப்பின் சில படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓடிடி தளத்தில் வெளியானது ஆனாலும் கூட சில காரணங்களால், இந்தப் படம் வெளியாகாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த செப்டம்பர் மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் 'பாந்த்ரா' வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள். ஆனால். வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.