கிர்கிஸ்தானில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்
தமிழில் 'விக்ரம் வேதா, இவன் தந்திரன், இறுகப்பற்று' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது ரவி மோகனின் 'ப்ரோ கிளப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அங்கே சைக்கிள் பயணம் மூலமாக மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் வழியாக மொத்தம் 341 கிலோமீட்டர் தூரத்தை 8 நாட்களில் கடந்து இந்த பயணத்தை மேற்கொண்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
“எட்டு நாட்கள் நீடித்த இந்த சவாலான சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்தபோது பெருமையாலும் மகிழ்ச்சியாலும் எனது கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது. கிர்கிஸ்தான் நாட்டின் இயற்கை அழகு சொர்க்கத்தைப் போல் இருந்தது; மலைப்பாதைகள், சரளைக் கற்கள் நிறைந்த வழிகள் மற்றும் நீரோடைகளைக் கடந்து சென்றது ஒரு கனவு போல இருந்தது” என்று இந்தப் பயணம் குறித்து மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.