உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குற்றவாளி அப்ரூவராக மாறியதை எதிர்த்து நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

குற்றவாளி அப்ரூவராக மாறியதை எதிர்த்து நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு


கடந்த 2024ல் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகியுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரதோஷ் என்பவருக்கு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பெங்களூரு 59வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கி, அந்த வழக்கில் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் தர்ஷன்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றவாளி பிரதோஷூக்கு வழங்கப்பட்ட அப்ரூவர் அந்தஸ்து மற்றும் நிபந்தனை பொது மன்னிப்பு உத்தரவை சட்டபூர்வ காரணங்களைக் கூறி எதிர்த்து. இதில் பிரதோஷின் வாக்குமூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கு முன்பு இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தர்ஷன் கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !