உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கும், சல்மானுக்கும் போட்டி இல்லை : 'மான்ஸ்டர்' டைட்டில் குறித்து சிவராஜ்குமார் விளக்கம்

எனக்கும், சல்மானுக்கும் போட்டி இல்லை : 'மான்ஸ்டர்' டைட்டில் குறித்து சிவராஜ்குமார் விளக்கம்

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில், 'கப்ஜா' பட இயக்குனர் ஆர்.சந்துரு இயக்கத்தில் உருவாகும் படம் 'ஒரிஜினல் மான்ஸ்டர்'. இதில் தெலுங்கு நடிகர் சுனில் உட்பட பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்கின்றனர். இதுவரை தமிழிலும், மலையாளத்திலும் 'மான்ஸ்டர்' என்கிற பெயரில் படங்கள் வந்திருக்கின்றன, தெலுங்கிலும் கன்னடத்திலும் வெளியானது இல்லை. அப்படி இருக்க, கன்னடத்தில் எதற்காக மான்ஸ்டர் என வைக்காமல் 'ஒரிஜினல் மான்ஸ்டர்' என்கிற பெயரில் டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியம் பலருக்கும் எழுந்தது.

இன்னொரு பக்கம், தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சல்மான்கான், நயன்தாரா இணைந்து ஹிந்தியில் நடித்து வரும் படத்திற்கும் 'மான்ஸ்டர்' என்றுதான் டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் உலாவி வருகிறது. இந்த நிலையில், இப்படி 'ஒரிஜினல் மான்ஸ்டர்' என்று டைட்டில் வைத்திருப்பது, தங்களது படமும் பான் இந்தியா படமாக உருவாவதால் சல்மான்கான் படத்திலிருந்து தனித்து காட்டுவதற்காகவா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது..

இதுகுறித்து பேசிய சிவராஜ் குமார், இரண்டு படங்களின் தலைப்புகளிலும் 'மான்ஸ்டர்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பும் சில ஒப்பீடுகளும் எழுந்துள்ளன. சல்மானின் 'மான்ஸ்டர்' எங்களுடைய, 'ஒரிஜினல் மான்ஸ்டர்' இரண்டும் முற்றிலும் வெவ்வேறு கதைகளைக் கொண்டவை. இது சிவாவிற்கும், சல்மானுக்கும் இடையேயான போட்டி கிடையாது. நாங்கள் அனைவரும் ஒன்றுதான். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சல்மான்கான் படத்தில் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற விரும்புகிறேன். கடவுள் அருளால் அது நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !