உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் படத்தில் கதை கேட்காமல் நடி : கதிருக்கு நம்பிக்கை கொடுத்த லோகேஷ்

துல்கர் படத்தில் கதை கேட்காமல் நடி : கதிருக்கு நம்பிக்கை கொடுத்த லோகேஷ்

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஆர்.டி.எக்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் நஹாஸ் ஹிதாயத், தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் 'ஐ ஆம் கேம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 3ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் கதிர் கிரிக்கெட் வீரராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் வாய்ப்பு தனக்கு வந்தது குறித்து நடிகர் கதிர் கூறும்போது, ஒரு நாள் லோகேஷ் அண்ணா எனக்கு போன் செய்து, 'மலையாளத்தில் வெளியான ஆர்.டி.எக்ஸ் படம் பார்த்தாயா ? அந்த இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் உன்னை சந்திக்க விரும்புகிறார். அதேசமயம், நீ அவரிடம் கதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை; நான் கதையை கேட்டுவிட்டேன், எனது பொறுப்பில் உத்தரவாதம் தருகிறேன்' என்று கதிருக்கு நம்பிக்கை அளித்தார் லோகேஷ். இந்த அசைக்க முடியாத நம்பிக்கையே இந்தப் படத்தில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது என்று கூறியுள்ளார் கதிர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !