தம், சரக்கு அடிக்கிற சீனில் நடித்த நயன்தாரா
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த டாக்சிக் படம், படு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோ யஷ் அக்காவாக நடித்துள்ளார் நயன்தாரா. கதைப்படி இடைவேளை வரை அவருக்கு நல்ல கேரக்டர், நிறைய சீன்கள். தாதா கும்பலை சேர்ந்தவராக, கடத்தல்காரன் அக்காவாக நடிப்பதால் சில இடங்களில் புகைபிடிக்கும் காட்சி, ஒரு இடத்தில் சரக்கு அடிக்கும் காட்சியில் நடித்து இருக்கிறார் நயன்தாரா. சில சீன்களில் மட்டுமே இப்படி இருக்கிறது. அதிலும் ஒரு சீனில் மட்டுமே அவர் புகையை இழுத்து ஊதுபவராக இருக்கிறது. மற்ற சீனில் அவர் கையில் சிகரெட் இருக்கிறது. இன்னொரு சீனில் அவர் கையில் சரக்கு இருக்கிறது. அதை அடிப்பது போல நடிக்கவில்லை. இதுவரை இப்படிப்பட்ட கேரக்டரில் நயன்தாரா நடித்தது இல்லை. ஆனாலும் இயக்குனர் கீது மோகன்தாஸ் அவர் தோழி என்பதாலும், கதைக்காக இப்படி நடித்ததாக தகவல். டாக்சிக் படத்தை மொத்தமாக வறுத்தெடுப்பதால் நயன்தாராவின் இந்த சீன்களை யாரும் கவனிக்கவில்லை. அதேசமயம், நாளை வெளியாக உள்ள ஹாய் படத்தில் பக்கா ஹோம்லி கேரக்டரில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார்.