உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகிழ்ச்சியாக ஓணம் கொண்டாடிய அனுபவமா பரமேஸ்வரன்

மகிழ்ச்சியாக ஓணம் கொண்டாடிய அனுபவமா பரமேஸ்வரன்

தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக காதல் பிரிவு குறித்து செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன். தமிழில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருபவர்.

அவருக்கும் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமுக்கும் காதல் என்று பேசப்பட்டது. ஆனால், இது குறித்து அவர்கள் இருவருமே வெளிப்படையாகப் பேசியதில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் காதலர் யார் என்று சொல்லாமல் அவரைப் பற்றிய விமர்சனங்களை முன் வைத்துப் பேசியிருந்தார் அனுபமா.

இந்நிலையில் தனது காதல் பிரிவு கவலைகளை மறந்து தனது குடும்பத்தினருடன் நேற்று ஓணம் கொண்டாடிய பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் அனுபமா. திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்தப் பதிவிற்கு மட்டுமே லைக்குகுள் ஒரு மில்லியனைத் தொட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !