‛இருமுடி' : சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை பாராட்டிய தனுஷ்
தெலுங்கில் சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சிறுமி நக்ஷத்ரா ஆகியோர் நடிப்பில் கடந்தவாரம் திரைக்கு வந்த படம் இருமுடி. கடந்த 4 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, ரவிதேஜா மற்றும் அவருக்கு மகளாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
நக்ஷத்ராவின் நடிப்பைப் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் வீடியோ காலில் தன்னை பாராட்டியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நக்ஷத்ரா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உரையாடலின் போது, என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் போது நக்ஷத்ராவிடம் இருந்து நடிப்பு கற்றுக்கொள்ள விரும்புவதாக சொல்லி அவரை உற்சாகப்படுத்திய தனுஷ், அவரது நடிப்பைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.